குழந்தை லோகபிரியா நலமாய் - நன்றியுடன்
அன்பான நண்பர்களே,
டிசம்பர் 31 2006 அன்று குழந்தை லோகபிரியாவிற்கு இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த வேண்டுகோள் பற்றி இந்தப்பதிவுவாயிலாக வெளியிட்டிருந்தேன்
வலையுலகு மற்றும் மற்ற நண்பர்கள், ஆர்வலர்களது உதவியுடனும், நல்லாசிகளுடனும் குழந்தை லோகபிரியா இருதய அறுவை சிகிச்சை 24/01/2007 அன்று நல்ல படியாக நடந்து முடிந்தது பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன்.
நேற்று நண்பர் சங்கரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.அது அப்படியே உங்கள் பார்வைக்கு.
*****************************************************************************
அன்புள்ள பாலாஜி
நொம்ப நாட்களாக ஃபோனிலும், தெரிந்தவர் மூலமாகவும், இருதய அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை லோகப்பிரியா நலம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டிருந்தோமல்லவா.. அதன் தொடர்ச்சியாக
நேற்று குழந்தை லோகப்ரியாவை அழைத்துக் கொண்டு அவரது தாயார் என் வீட்டிற்கு வந்திருந்தார்.
"ஆபரேஷன் முடிந்து 8 மாதங்களாகி விட்டது. அவ்வப்போது குழந்தைகளுக்கே உண்டான சிறு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சிறு சிறு உபாதைகள் தவிர குழந்தை நல்லபடியாக இருக்கிறாள்.ரெகுலராக ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு செக் அப்பிற்கு போய் வருவதாகவும் டாக்டர்கள் குழந்தை நார்மலாக இருக்கிறாள் , இனி ஒரு கவலையும் இல்லை. என்று தெரிவித்ததாகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
குழந்தை 15.01.2007 அன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இப்போது அவளது தந்தை கவலையற்று தினம் வேலைக்கு செல்வதாகவும், தான் இன்னும் ஒரு 6 மாதம் பார்த்து விட்டு , பின் ஏதாவது வீட்டு வேலைக்கு போகலாம் என்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
லோகபிரியாவின் வாழ்வில் விளக்கெற்றி வைத்து தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி சொல்லும்படி கண்களில் நன்றி ததும்ப திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.
குழந்தை நல்ல துறு துறுப்பாக ஓடியாடி விளையாடுகிறது...ஆபரேஷன் மற்றும் மருந்து மாத்திரைகளால் கொஞ்சம் பூஞ்சையாக இருக்கிறது.ஆனால் நாளாவட்டத்தில் தேறி விடும் என்று நினைக்கிறேன்.
நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒரு நன்முயற்சியின் வெற்றியும் பலனும் கண் முன்னே கண்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் சார்பாகவும் , வலையுலக நண்பர்கள் சார்பாகவும் குழந்தைக்கு வாழ்த்து சொல்லி, பிறந்த நாள் பரிசும் கொடுத்தனுப்பினேன். இந்தச் சமயத்தில் உதவி செய்த நமது வலையுலக நண்பர்கள அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
இதை நானே வலை பதியலாம் என்று நினைத்தேன்..ஆனால் உன் வலைப் பதிவில் போட்டால் தொடர்ச்சி இருக்கும் என்பதால் உனக்கு அனுப்பியுள்ளேன்.
Bala..a great job..well done..Thanks to one and all.
அன்புடன்...ச.சங்கர்
****************************************************************************
இதைப் பதிவதுடன் இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், குழந்தை லோகபிரியா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
***365***
9 மறுமொழிகள்:
Test comment :)
அறுவை சிகிச்சைக்குப் பின் நல்ல உடல்நலத்தோடு குழந்தை லோகப்பிரியாவை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உதவிய நண்பர்களுக்கும் பிராத்தனை செய்த நண்பர்களுக்கும் நன்றி.
மிகவும் மகிழ்வான செய்தி. குழந்தையை பார்க்கையில் மனம் நிறைவடைகிறது.
அன்பு சங்கர், பாலா உங்கள் சேவை தொடரட்டும்.
உதவிய அனைவருக்கும் நன்றி.
எ.அ.பாலா,
மன நிறைவு தரும் விஷயம். உடல் நலம் தேறி வந்த குழந்தையைக் காணும்போது பெரும் மகிழ்ச்சி.
தமிழ் இணையம்/வலைப்பூக்கள் மூலமாக இம்மாதிரியான நல்ல விஷயங்கள் பலர் உதவிகள் செய்ய தொடர்ந்து நடக்க வேண்டும் .
இம்மாதிரி நல்லவிஷயங்களை முன்னெடுத்து செல்வதற்கு எனது நன்றிகள்!
முத்து குமரன், மஞ்சூர் ராசா, அரிகரன்,
உதவியவர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. நன்றி.
தொடரட்டும் .......
தகவலுக்கு நன்றி பாலாஜி....இது போன்ற நல்ல பணிகளைத் தொடர வாழ்த்துக்கள்.
மனம் மகிழ்கிறது - இறுக்கங்களுக்கு இடையே இம்மாதிரி நல்ல உள்ளங்களின் காலத்தினால் செய்த உதவிகள் என்றென்றும் நினைவில் இருக்கத்தக்கவை. தொடர்க தொண்டினை - வாழ்த்துகள்
பின்னூட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment